Skip to main content

More of Aathmaanaam - இன்னும் - Page 145

Moreover



Pigeons fly away
with diamonds on their neck
Parrots too chase themselves
with lustrous love
Crows 'caw' away
in search of grains
Sparrows titillate
crawling on the branches
In the moss spread
lotus covered
pond water
the long-legged bird paddles slowly
The squirrels that sit under the shore shade
now and then lift up and show their heads
as if some questions were asked to them
The Shiva priest
picks up water in the pot
raving himself
with the same mouth the utters the mantras
The Chaste Women Crowd
talking about stories in their town
wash the clothes
on the rocks of the shore on the other side
and leave
The Sun that was behind the fields
rose up
and fell on the heads of the boy
who was herding the buffaloes

Foot Note: What Vivid imagery ... A poem full of visuals ... What a story telling ... Life craves for more and more and more ...

Comments

  1. இன்னும் - page 145

    இந்த கவிதையில் ஒரு சந்தம் மீண்டும் படிக்க தோன்றுகிறது கழுத்தில் வைரத்தோடு புறா. செம அழகு கற்பனை. நந்தா சொல்வது போல என்ன என்ன கற்பனை கதை சொல்லுதல் எத்தனை கதை மாந்தர்கள் இந்த கவிதைக்குள். கடைசி மூன்று வரிகள் ஒரு நவீன கவிதைக்கான சிறப்பு.

    ReplyDelete
  2. A description of sight and exploding within that are an ensemble of birds, squirrels, men and women. There seems to be some sort of urgency in this poem, it feels like the poet is capturing the scene as it is unfolding in front of him but with turbid eyes. Within this urgency is also a pertinent meter, which seems unique to the language in which the poem is crafted in. When my father read this poem in Tamil it had a jump, bounce and expression, which seems a bit mild in English (not sure how you felt about it, while translating, Nundha?) He is also describing the nature around him with a blanket of fantacy like pigeons with diamonds or titillating sparrows…a sure indulgence of surrealism…
    In Italo Calvino’s literary testament, Six Memos for the New Millennium, he posits the tension between word and image as the driving force behind his work. The images, however, are not merely visual, they are often transformed into pictorial genres: emblems, landscapes and even cartoons. Is it possible to extend the same ethos onto this poem that evokes a similar (tension) elasticity? I wonder whether the image is invoked by the text or the image exists and text drapes itself onto it? Perhaps somewhere here is also my struggle between word-image-sound.

    (My father pointed out as to how madhu in this poem describes nature with care but human beings a bit mockingly, not sure if you two got this feeling. I did this poem with my father yesterday. He found it difficult to translate this poem, as it needed one to re-organize the structure of the lines to explain to me. There were quite a few stark differences in choice of structure between my father and yours and would love to discuss this when we meet next.)

    ReplyDelete
  3. “பாசிக்கரை” என்பதற்குப் ‘பாசியின் கரை’ என்று பொருள்
    கொள்ள முடியாது. நீர்க்குளத்திற்குத்தான் கரையுண்டே தவிரப் பாசிக்குக் கரையேது? இப்படிப் பார்க்கும்போது, “பாசிக்கரை” என்பதைப் பொருத்தமற்றதாகவும், “பாசிக்கறை” என்பதையே
    பொருத்தமானதாகவும் கூறிவிடலாம். ஆனால், “பாசிக்கரை” என்ற சொல்லாட்சிக்குப் ‘பாசியை உடைய (குளக்)கரைநீரில் படர்ந்த தாமரை’ என்று வல்லார்வாய்வழிக் கொண்டுகூட்டி, இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்வந்து தொக்க
    தொகையாகப் பொருள் விரிக்கும்போது, அதுவும்கூட ஏற்புக்கு உரியதாகிவிடலாம். மேலும், “பாசிக்கரை” என்பதற்குப் ‘பாசி ஆகிய கரை’ எனக் கவித்துவநயத்துடன், ‘நோக்குவ எல்லாம் பாசியே போறலாகி’ப் பாசியையே கரையாகவும் உருவகிக்கலாம். பாசிக்கரையை உருவகமென்று ஏற்றுக்கொள்வதற்கு, அது ஒரு விதியைப் பூர்த்தி செய்தாகவேண்டும். எந்த உருவகத்தையும் திருப்பிப்போட்டால், உடனே அது உவமையாகிவிடவேண்டும் என்பதே அந்த விதி. பாசிக்கரையைத் திருப்பிப்போட்டால் கரைப்பாசி; அதாவது கரையைப்போல் தெரியும் பாசியென்று அது உவமைத்தொகையாகிவிடுவதைக் காணலாம். எனவே, பாசிக்கரை என்பதைப் பாசியாகிய கரையென்றும் உருவகமாகக்
    கொள்வதற்குத் தடையில்லை. இப்பாசியைக் கவிஞர் இயல்பாகக் கறையென்ற பொருளில்தான் சுட்டியிருக்கவேண்டும்; அந்த வகையில் இப்பதிப்பில் (2002: ப. 145), ‘பாசிக்கரை’ என்பதைத் திருத்திப் ‘பாசிக்கறை’ எனப் பிரம்மராஜன் பதிப்பித்த அம்முறை ஒருவகையில் சரிதான் என்றும் வாதிடலாம். எனினும், ‘பாசிக்கரை’ எனத் தனித்துவத்துடன் ஆத்மாநாம் எழுதியிருந்தால், அதில் ஒரு புதுநோக்கை அவர் உத்தேசித்திருந்தால், அது ஒரு தவறான
    சொற்பயன்பாடு என்ற இலக்கணவயப்பட்ட விமர்சனத்தைத் தாண்டி, அப்பயன்பாட்டுக்குத் தக்கவாறு சமாதானம் கண்டு, எதிர்வாதம் புரிவதிலும் நியாயம் உண்டுதானே?
    புறாக்கள் பறக்கின்றன; கிளிகள் விரட்டிச்செல்கின்றன. காக்கைகள் கரைகின்றன; குருவிகள் கிளுகிளுப்பூட்டுகின்றன. ஆனால், நீளக்கால் ஏன் மெல்ல அளைகிறது? பழங்களைக் கடித்துத் தின்னும் அணில்கள், ஏன் கேள்விகள் கேட்டாற்போல் அவ்வப்போது தலைகளைத் தூக்கிக் காட்டுகின்றன? இவற்றின்மீது கவிஞனுக்குப் பிரத்தியேகமான மனப்பதிவுகளேதும் உண்டா? அல்லது இக்காட்சிகள் வெறும் இயற்கைப்பதிவுகள் மட்டுமா? இதைப் பற்றி வாசகர்கள்தாம் கண்டுபிடித்துக்கொள்ளவேண்டும்.
    இக்கவிதை, சுதீப்ராயின் ஓவியத்துடன், என். கல்யாணராமனின் (சிவசங்கரா) ஆங்கிலமொழிபெயர்ப்பில், சமகால இந்தியமொழிக் (20 மொழிகள்) கவிதைகளுக்கான தொகுப்பில் இடம்பெற்றுள்ளது (2011: பக். 280-281). இறுதிவரியை நோக்கித்தான் இக்கவிதை விரைகிறது.
    எருமை ஓட்டும் சிறுவனின் தலையில் அல்லாமல், வேறு வலிமை படைத்த வளமானவன் மீதெல்லாம், சூரியனாகவே இருந்தால்தான் என்ன, அவனாலும் விழுந்துவிடமுடியுமா? அப்படியே அவன் விழுந்துவிட்டாலும், அந்தச் சூரியன்தான், பிறகும் எழுந்துவிடமுடியுமா என்ன! இதன் கவிதைக்கட்டுமானம்
    குறித்து, “கவிஞனின் குரல் தற்பொழுது பெரிதும் மிக்ஷீஷீஸீவீநீஆகவே
    ஒலிக்கிறது; இது தவிர்க்கமுடியாதது. இவ்வகையில், ஆத்மாநாமின் ‘இன்னும்’ வெறும் காட்சிவிவரிப்பாகக் கதைசொல்லலாகப்
    போகாமல் தடுப்பது, ‘மந்திரம் சொல்லும் வாயால் தம்மையே
    நொந்துகொண்டு’ என்கிற வரிகளே ஆகும். ஆனால், அடுத்த வரியில் வரும் ‘கற்புடைப் பெண்டிற்கூட்டம்’ என்பதோ, எந்த விதமான எதிரொலியையும் கிளப்பாதவிதத்தில் ஷிலீணீறீறீஷீஷ்ஆக ஒலிக்கிறது” (பிரக்ஞை : 2: நவம்பர் 1974: ப. 6) என்கிறார் ராஜீவி ராமதுரை. இங்குச் Ôசிவனருள் பூசாரிÕயின் நொந்துகொள்ளலைக் கவிஞரின் கவிநுட்பமாக ராஜீவி ராமதுரை கண்டுகொண்டாலும், “கற்புடைப் பெண்டிற்கூட்டம்” பற்றிய விவரிப்பைத் தொனிக் கூர்மையுடன் அவர் விளங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. அக்கரைக்கற்கள்மீது பெண்கள் அமர்வதும், ஊர்க்கதைகளைப்
    பேசுவதும், துணிகளைத் துவைத்துச்செல்வதும் கற்புடைப்
    பெண்டிற்கூட்டத்தின் அன்றாடமாகும். இந்த அன்றாடத்தை, இது பற்றிய விமர்சனப்பார்வை ஏதுமின்றிக் கவிஞர் பதிவு
    செய்துவிட்டதாகப் பிழையாகக் கருதக்கூடாது. கற்புடைப்
    பெண்டிற்கூட்டம் என்பதில் தொனிக்கும் இக்கேலிதான், ஆத்மாநாமின் கவிப்பார்வையாகும். இக்கேலி, பெண்களை ஆண்நோக்கிலிருந்து எள்ளி நகையாடுகிறது என விமர்சிப்பதன்றிக் ‘கற்புடைப் பெண்டிற் கூட்டம்’ என்ற விவரிப்பையே ஷிலீணீறீறீஷீஷ்ஆக ஒலிப்பதாகக் கூறிக் குற்றஞ்சாட்டிவிடுவதற்கில்லை.

    ReplyDelete
  4. இது ‘வெற்றெனத் தொடுத்தல்’ ஆகாது; அந்நாள்களில் அன்றாடவாழ்வில் பெண்களுக்கு என்று வரையறுக்கப்பட்டிருந்த சிறுபங்கைக் கேலி செய்வதாகும். நகரக்கவிஞராக ஆத்மாநாமைக் காணும் மிகப்பலரின் மதிப்பீட்டிற்கு எதிர்மாறாகக் கிராமக் காட்சிகளையும், கிராமப்பெண்களையுமே இக்கவிதை
    மையப்படுத்துகிறது. எனவே, எந்தவிதமான எதிரொலியையும் கிளப்பவில்லை என்ற விமர்சனம் ஏற்கத்தக்கதன்று. ‘மாறாத வாழ்வு’ பற்றிய சலிப்பை முதல் 24 வரிகளில் விவரித்துவிட்டுக் கடைசி நான்குவரிகளில் குறிபார்த்தடித்துக் காலத்தைக்
    குப்புறத்தள்ளிக் கண்ணிமைப்பில் மறுஉயிர்ப்பூட்டிக் கனலாய் ‘நகைப்பை முழக்குகிறார்’ ஆத்மாநாம். இந்நகைமுழக்கின்
    நுண்வீச்சை, “சாதாரண வாழ்க்கைச்சம்பவங்கள் மனித நியதிகளுக்குத் தொடர்புபடுத்தப்படுவனவாயும், சம்பவங்களால் பரிணாமப்படுத்தப்படுவனவாயும் ஆத்மாநாம் கவிதைகளில்
    வெளிப்படுகின்றன” (1982: ப. 29) எனச் சுப்ரபாரதி மணியன் சுட்டிக்காட்டுகிறார். இக்கவிதைக்கு ஆத்மாநாம், ‘இன்னும்’ என்று,
    நுட்பமாகத் தலைப்பிட்டுள்ளார். இது ஒரு தொடக்கம்தான்; மாறும் வாழ்வில் இன்னும் எவ்வளவோ அதிர்ச்சிகள் நிகழக் காத்திருக்கின்றன என்கிறாரோ! நடப்பவை எவையுமே நன்றாக நடக்கவில்லை; இன்னும் நடக்கமுடியாதவை நடந்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம் என்கிறாரோ! இது ஒருபுறம் இருக்க, இக்கவிதை பற்றிய இன்னொரு பூதத்தையும் கிளப்புகிறார் சுந்தர ராமசாமி. “ஞானக்கூத்தனின் ஆரம்பகாலக் கவிதைப்போக்கைப் பிரதிபலித்து, இவர் எழுதியுள்ள ‘இன்னும்’ என்ற கவிதையில்தான், இவர் சுத்தமாக இல்லாமல் இருக்கிறார். மற்ற கவிதைகளில் மொத்தம் 143 கவிதைகள் (என் தேடலில், இன்றுவரையில் 156 கவிதைகள்). இவரது ஆளுமை பலவற்றில் மங்கலாகவும் ஒரு சிலவற்றில் மிகச்சிறப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது” (சிலேட்: பிப்ரவரி 1993: ப. 41) எனச் சு.ரா. கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இக்கருத்தைச் சு.ரா.வைப் பின்பற்றித் தற்போது சுகுமாரனும் வழிமொழிந்துள்ளார் (2015: ப. 5).
    தம்மைத் (ஷிமீறீயீ) தவிரப் பிறவற்றை மற்றமை (ளிtலீமீக்ஷீ) எனக் கண்டு நக்கலடிக்கும் மண்ணோடு ஒட்டிவிடமறுக்கும் ஞானக்கூத்தனின் கவிப்பார்வைக்கும், மற்றமையைத் தாமாகவே கண்டு ‘ஆத்ம சுத்தி’யுடன் உரையாடும் ஒட்டுதலுணர்வு கூடிய ஆத்மாநாமின் கவிப்பார்வைக்குமான இடைவெளியைக் காணச் சமூகக்கண்கள்
    தேவைப்படுகின்றன. ‘இன்னும்’ கவிதையில் சுத்தமாக ஆத்மாநாம் இல்லையென்றும், ஞானக்கூத்தனே அதில் இருக்கிறார் என்றும் சு.ரா. அவதானிப்பது சரியானதுதானா? ஞானக்கூத்தனின் ஆரம்பகாலக் கவிதைப்போக்கில் சி.மணியின் கவிச்சாயலுக்குப்
    பெரும்பங்குண்டு என்பதையும் கருதவேண்டும். ஏன்? 1958இல் க.நா.சு. எழுதிய Ôபேச்சாளர்Õ (1989: பக். 27 - 29) என்ற கவிதையின் வளர்நிலைதான், 1968 - 1969இல் ஞானக்கூத்தன் எழுதிய Ôபரிசில் வாழ்க்கைÕயும், ÔகாலவழுவமைதிÕயும் (2001: பக்.3 - 4,7) எனக் கவனித்தும் விவாதிக்கலாம். இம்மூவரிடமிருந்தும், முற்றிலும்
    வேறுபட்ட ‘பச்சை உண்மையைÕப் பிரதிபலிக்கும் தீவிரத்
    தொனியைப் படைப்பில் கூர்மைப்படுத்தியவர் ஆத்மாநாம் என்பதையும் காணத்தவறலாகாது.

    நடுநிசியில் மரத்தடியில் ஒன்றுக்கிருப்பவனின் தலையில் விழுந்து அவனைக் கொன்றுவிட்டு, ரத்தக்களங்கமும் விழுந்த
    நோவும் தெரியாமல் கிடக்கும் ஒரு நெற்றுத்தேங்காயைச் (கசடதபற: ‘மே’ 1972: ப.2) சிலாகித்தெழுதும் ஞானக்கூத்தனுக்கும், எருமைகள் ஓட்டிச்சென்ற சிறுவனின் தலையில் வீழ்ந்த சூரியனைச் சாடும் ஆத்மாநாமுக்கும் அடிப்படையான வேறுபாடு இருப்பதைச் சு.ரா. கண்டுகொள்ளாமல் நழுவவிடுவது ஏமாற்றமளிக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழைப்பு - Page 162

The Invitation On the second floor - at the attic near the single window me with myself eating food Nearby on the neem tree branch a crow called Thinking whether ancestors or deities I placed a morsel of rice outside Rice by rice the crow flew away I do not know whose ancestors they were Note : An ordinary man with extraordinary deeds

மேலும் ஒரு நான் - Page 160

One more me I am not a saint too I am not a Siththan* I am a genius lunacy caught non-lunatic I am an educated uneducated poet I am a patient though knowing  the medicine who does not take it I am an inexperienced/ignorant  who has touched truth Not a perfect but does not know to lie Not a truthful person but I say the truth I am the one who exists transgressing these Note : *Siththan - What is the English equivalent?

ஒரு புளியமரம் - Page 155

A tamarind tree A tamarind tree became my friend recently Accidentally when I went there after a voice from the shadow do you know me I shuddered looking upon that tamarind tree do you remember the other day when you came to pick the tamarind fruits you slept on my sister's lap then I waved the cool wind on your face on your body everywhere come however to my lap