Skip to main content

Aathmaanaam Rests In Peace - அமைதிப்படுகையில் - Page 157

(While) Resting at peace



In the hug of these wondrous trees
I am a kite
Between the branches of the Neem tree
I am a line of sunlight
Amidst the Papaya plant's
I am a sweetheart
On the braided creepers
I am a star

Footnote: Rest in peace and be alive

Comments

  1. அமைதிப்படுகையில் (page 157)
    மிக அபாரமான கவிதை இது. நந்தா மொழிபெயர்க்க தேர்ந்தெடுக்கும் வரிசையில் ஒரு நகர்வும் அந்த கவிதைக்கு பின் இதை படுக்கும் போது ஏதோ ஒரு அசைவு நகர்வு sort of vibration, feeling great. coming back to poem
    காற்றாடி நிஜம் கையில் தொட்டு அனுபவித்து உணர முடிந்தது. சூரிய ஒளி நிஜம் கண்ணால் பார்த்து உணரலாம், இனிமை அனுபவிக்க மட்டுமே முடியும் கடைசியாய் வரும் வரிகள் இந்த கவிதையை வேறு தளத்திற்கு நகர்ந்துவதா?
    மரத்தில் சிக்கி அலைகலியும் காற்றாடிக்கும் அமைதிக்கும் என்ன சம்மந்தம்? மரக்கிளை இடைபடும் சூரியஒளிக்கு எதற்கு அமைதி, அமைதியோடு அது எங்கே சம்மந்தப்படுகிறது. பப்பாளி பழ இனிமை அமைதியோடு எங்கே இணைகிறது?
    பின்னர் சடை சடையாய் தொங்கும் கொடிகளில்(இதுவே ஒரு அமைதியின்மையின் வெளிப்பாடு) எதற்கு நட்சத்திரம்?

    ReplyDelete
  2. The poem beckons the reader to view the world with libbed eyes. Then you see spots of lights and patterns. Imagine a Sunday afternoon in a winter month. Lying down and staring out. Feeling one with the cosmology of the world and its breath. I really enjoy this word wonderous…and its such an ornate poem and so delicately put in words without taking away this very special feeling that all of us go through. I wish I was there with him this day…
    Here’s a song for a Sunday..for his Sunday in Ambatur.
    https://www.youtube.com/watch?v=VLs09J_x6-c

    ReplyDelete
  3. ழவில் (இதழ் 8: செப்டம்பர் - நவம்பர் 1979, ப. 12), முதலில் இது
    வெளிவந்தபோது, இதன் ஏழாம்வரி, “சடைசடையாத் தொங்கும்
    கொடிகளில்” என்றுதான் பிழையாகப் பிரசுரமாகியிருந்தது. ஆனால், பின்வந்த ‘காகிதத்தில் ஒரு கோடு’ (ப. 18) தொகுப்பில், இது திருத்தப்பட்டுச் “சடைசடையாய்த் தொங்கும் கொடிகளில்” என்றானது. இதையே பிரம்மராஜனும் பின்பற்றியுள்ளார். ஆனால், ழ வில் இவை, ‘நான்கு கவிதைகள்’ எனப் பொதுத்தலைப்பின்கீழ்ச் Ôசில எதிர்கால நிஜங்கள், சுற்றி, அமைதிப் படுகையில், மேலும் ஒரு நான்Õ என்ற வரிசை முறையில்தான் இடம்பெற்றிருந்தன. பிறகு ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில், இவ்வரிசைமுறை மாற்றப்பட்டுவிட்டது. இவ்வரிசைமாற்றத்தைப் பின்பற்றியே, இக்கவிதைகளைப் பிரம்மராஜனும் பதிப்பித்துள்ளார். ‘நான்கு கவிதைகள்’ என்ற பொதுத்தலைப்புக்குட்பட்டு வாசிப்பதில், ஏதோ ஒரு தொடர்ச்சியையும் நுண்பொருள் கொள்ளலையும் ஆத்மாநாம் உத்தேசித்திருக்கலாம். இவற்றுக்குத் தனித்தனித் தலைப்புகளுள்ளன என்பது எவ்வாறு உண்மையோ, அவ்வாறே இவற்றுக்குள் ஒரு பொதுமையம்சத்தை ஆத்மாநாம் கருதியதும் உண்மையாகலாம். மேலும், “அமைதிப் படுகையில்” என்றுதான், ழவில் இக்கவிதை, இரு தனித்தனிச் சொற்களாகப் பிரிக்கப்பட்டுத் தலைப்பாகவும் பிரசுரமாகியிருந்தது. இதைப் பிரம்மராஜன், ‘அமைதிப்படுகையில்’ எனச் சேர்த்துவைத்து, ஒரே சொல்லாகத் தலைப்பிட்டுப் பதிப்பித்துள்ளார். ‘அமைதிப் படுகையில் மனம் நிலைத்திருக்கிறது’ என்பதற்கும், ‘மனம் அமைதிப்படுகையில் மகிழ்ச்சி பிறக்கலாம்’ என்பதற்குமான நுண்ணிய வேறுபாட்டை வாசகர்களே அறியவேண்டும். இனிக் கவிதையைக் கவனிப்போம்.

    ‘அமைதிப் படுகையில்’ இருப்பவன் நான் என்கிறார் ஆத்மாநாம். வேப்பமரம், அதன் கிளைகள், அவற்றினிடையே
    தெரியும் சூரியரேகை, சூரியரேகைக்கு உருவம் தர முடிந்தால் . . . அதுதானே மனிதமுகமாகத் துலங்கவேண்டும்? அச்செழிப்பும் சுறுசுறுப்பும் உயிரை ஊடுருவும் புத்தொளியும்! “இக்கவிதை, இவரது வாழ்வின் நம்பிக்கைத்தொனியையும் அதேசமயம்
    ஒரு கனவுத்தன்மையான ரொமாண்டிக் குணத்தையும் காட்டுகின்றது” (2014: ப. 299) என்கிறார் க. பூரணச்சந்திரன். ‘நான்’ என்பது, இங்குத் தன்னுணர்வுதானா? பிரபஞ்சப்
    பேருணர்வுமாகாதா? அந்த ‘நான்’தான் யார்? அது காற்றாடியா? சூரியரேகையா? இனிமையா? நட்சத்திரமா? நான் என்பது ஒருமை என்று நம்பும்போது மட்டுமே, நான் யார்? என்ற
    கேள்வி, இத்தனை முக்கியத்துவத்துடன் எழமுடியும். இங்கு ÔவினாÕ ஏதும் எழுப்பப்படுவதில்லை; இக்காற்றாடியும் சூரியரேகையும் நட்சத்திரமும் இனிமையும்தான் நான் என ÔவிடைÕ பகிரப்பட்டுவிடுகிறது. இவ்வாறு Ôநான் என்பது சிதறலின் பன்மைÕ என்பதைத் தெரிந்துகொள்ள நேர்கையில், காற்றாடியும் சூரியரேகையும் நட்சத்திரமும் இனிமையும்கூடப் பன்மையின் சார்பிருப்புகளாகி, அதாவது நான் என்ற அந்த ஒருமையைச் சிதைத்துவிட்டுப் பல்லிருத்தல்களுக்கான Ôஜீவித நியாயங்களாகிÕ விடுகின்றன. இந்நுண்ணறிதல்களுடன் ஆத்மாநாம் கவிதையெழுதினார் அல்லது எழுதவில்லை என்பதன்று; தத்துவத் தளத்திலும் அவரது எழுத்துகளுக்குக் குறிப்பிடத்தக்க வீச்சுண்டு என்பதுதான் அறியப்படவேண்டியதாகும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழைப்பு - Page 162

The Invitation On the second floor - at the attic near the single window me with myself eating food Nearby on the neem tree branch a crow called Thinking whether ancestors or deities I placed a morsel of rice outside Rice by rice the crow flew away I do not know whose ancestors they were Note : An ordinary man with extraordinary deeds

மேலும் ஒரு நான் - Page 160

One more me I am not a saint too I am not a Siththan* I am a genius lunacy caught non-lunatic I am an educated uneducated poet I am a patient though knowing  the medicine who does not take it I am an inexperienced/ignorant  who has touched truth Not a perfect but does not know to lie Not a truthful person but I say the truth I am the one who exists transgressing these Note : *Siththan - What is the English equivalent?

ஒரு புளியமரம் - Page 155

A tamarind tree A tamarind tree became my friend recently Accidentally when I went there after a voice from the shadow do you know me I shuddered looking upon that tamarind tree do you remember the other day when you came to pick the tamarind fruits you slept on my sister's lap then I waved the cool wind on your face on your body everywhere come however to my lap